எத்தனைப் புயல்
எத்தனைப் பூகம்பங்கள்
எத்தனை எத்தனை யூகமாய்
எத்தனைப் போர்
எத்தனை இரத்தம்.
எத்தனை எழுப்சி
எத்தனை வீழ்ச்சி.
உங்கள் கண்களில்
நீரும் உண்டு
நெருப்பும் உண்டு.
உங்கள் வார்த்தைகளில்
சண்டையம் உண்டு
சமாதானமும் உண்டு.
உங்கள் நெஞ்சிக்குழிக்குள்
அமுதும் உண்டு
நஞ்சும் உண்டு.
உறவும் பகையும்
உங்கள் கைகளில்.
உங்களால் காயம்பட்டவர்கள்
புன்னகைத்திருக்கிறார்கள்,
உங்கள் புன்னகையால்
எத்தனையோப்பேர்
காயம்பட்டுருக்கிறார்கள்.
சித்தர்கள் கூட
சித்தம் கலங்கி
பித்தர்கலானார்கள்.
உலகின் மிகப் பெரியப் பூ
பெண்களே
உலகின் வலிமையான ஆயுதமும்
பெண்களே.
நீங்களும் சமுத்திரமும் ஒன்றுதான்
உங்களில் அமிழ்ந்து கிடப்பவை
யாவும் அறிந்தவர் யாருமில்லை.
நீங்களும் வானமும் ஒன்றுதான்
உங்களின் எல்லைகளைக் கண்டவர்
யாருமில்லை.
உயிரின் அத்தியாவசியம் நீங்கள்
உயிர்க் கொல்லிகளும்
நீங்கள் தான்.
ஒவ்வொருவர் வெற்றிக்குப் பின்னாலும்
நீங்கள் இருக்கிறீர்கள்
ஒவ்வொருவரின் தோழ்விக்குப் பின்னாலும்
நீங்களே இருக்கிறீர்கள்.
உயிரைக் கொடுப்பதும்
நீங்கள்தான்
பேணி வளர்ப்பதும்
நீங்கள்தான்
அழித்தொழிப்பதும்
நீங்கள்தான்.
படைத்தல்
காத்தல்
அழித்தல்
யாவும் பெண்ணென்றால்
ஆண்டவன்
என்பது
யார்
இங்கே.
2 comments:
ஏங்க, நாங்க கிளம்புனதுக்கப்புறம் ஏதாச்சும் பிரச்சினையா? :))
நீங்க அந்த வில்லங்கமான ஓவியத்தைப் பத்திப் பேசுறப்பவே நெனச்சேன்!
mmm nice
Post a Comment