Saturday, June 28, 2008

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வழங்கிய நேர்காணல்

அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருக்கும் அவர், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை (24.06.08) வழங்கிய நேர்காணல்:

சிறிலங்காவுக்கு இந்திய உயர்மட்டக்குழுவொன்று திடீரென கடந்த வெள்ளிக்கிழமை பயணம் செய்தது. அக்குழுவில் இடம்பிடித்தவர்கள் பாதுகாப்புத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களாகவும் உள்ளனர். அதேவேளை, இராணுவ உதவிகளை வழங்கும் பயணமாகவே இதனை இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. நீங்கள் இவர்களின் பயணத்தினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

அமெரிக்காவில் இருந்தவாறு நானும் அச்செய்திகளை கவனித்துக்கொண்டே இருக்கின்றேன். ஈழ மக்களின் நன்மைக்கான பயணமே இது என முதலில் கூறப்பட்டது. ஆனால் என் போன்றவர்களுக்கு முதலில் இருந்தே அதில் நம்பிக்கை இல்லை. இப்போது வருகின்ற செய்திகள் எமக்கு ஒருவகையில் அதிர்ச்சியையும் இன்னொரு வகையில் இப்படித்தான் நடக்கும் என்பதையும் வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றன.

சிறிலங்காவுக்கு இராணுவத் தளபாடங்களை வழங்குவதும், தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கும் சிங்கள அரசுக்கு மறைமுகமாக உதவுவதும் இந்திய அரசின் நிலைப்பாடாக இருப்பது உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பெரும் வேதனையாக உள்ளது.

அதிலும் குறிப்பாக உயர் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கும் எம்.கே.நாராயணன் எப்போதும் தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துடையவராகவே இருக்கின்றார். அவர் இந்திய அரசின் உயர் அதிகாரப் பொறுப்பில் இருக்கின்றார்.

சிறிலங்காவுக்கான இவரது பயணத்தில் என்ன நடந்திருக்கின்றது என்பது எனக்கு அதிகாரபூர்வமாகத் தெரியவில்லை. இருந்தாலும் இந்த உயர் அதிகாரிகளின் போக்கை கணிக்கின்றபோது, தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நடந்துள்ளதா என்ற வேதனைதான் ஏற்படுகின்றது.

இந்தியப் பிரதமரை சந்திப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நான் டில்லி சென்றிருந்தபோது பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வலது புறத்தில் எம்.கே.நாராயணனும் இடதுபுறத்தில் சிவசங்கர் மேனனும் அமர்ந்திருந்தனர்.

அச்சந்திப்பில் எம்.கே.நாராயணன் பேசும்போதும் அவரது பேச்சின் தொனி தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிரானதாகவே இருந்தது. அந்த இடத்திலேயே பிரதமருக்கு முன்பாகவே நாம் அதனை சுட்டிக்காட்டினோம்.

எனவே இந்திய அரசு இந்த அதிகாரிகளின் போக்கை நம்பாமல் தமிழ் மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தொடர்ந்தும் முன்வைப்போம்.

இந்திய அரசின் இந்தப்போக்கு நீடிக்கக்கூடாது என்பதை உலகத் தமிழ் மக்களின் ஒருமித்த கருத்தாக மீண்டும், மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இத்தகைய கோரிக்கைகளை பலரும் தொடர்ச்சியாக அனுப்பியிருந்த போதும் இந்திய அரசின் நிலைப்பாட்டில் இதுவரை மாற்றம் ஏற்படவில்லை. அப்படி இருக்கும் போது இந்திய அரசின் நிலைப்பாடு எதிர்காலத்தில் மாற்றமடையும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு எம்மைப் போன்றவர்களுக்கு மிகவும் குறைவாகவே உள்ளது. ஏனெனில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் டில்லியில் இருக்கும் உயர் அதிகாரிகள் சிலரே இந்தியாவின் கொள்கைகளை தீர்மானிப்பவர்களாக உள்ளனர்.

அடுத்து இந்தியாவிலிருக்கும் கட்சிகளும் தமிழர்களின் பிரச்சினைகளை நுணுகிப் பார்ப்பதில்லை. அவர்கள் அதிகாரிகளின் பேச்சை அடிப்படையாகக் கொண்டே முடிவெடுக்கின்றனர். இது ஒரு வேதனையான செய்தி. இதில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனில் அந்த மாற்றம் தமிழகத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும்.

தமிழக மக்களிடையே ஒரு எழுச்சியும் இந்த போக்கிற்கு எதிரான ஒரு வேகமும் ஏற்படுமானால் அதுதான் டில்லியில் இருக்கும் உயர் அதிகாரிகளின் மனநிலையை மாற்றும். அந்நிலை ஏற்படாதவரை டில்லியில் இருக்கும் உயர் அதிகாரிகளின் மனநிலையை மாற்றமுடியாது.

அதாவது, தமிழின உணர்வாளர்களின் குரல் மட்டும் அந்நிலையை மாற்றிவிடும் என்றும் நான் கருதவில்லை. அதற்காக எமது செயற்பாடுகளை கைவிட்டுவிட வேண்டியதில்லை. எமது தொடர் செயற்பாடுகளால் ஒரு மாற்றம் வரலாம்.

தமிழின உணர்வாளர்கள் அங்கே இருக்கும் பெரிய அரசியல் கட்சிகளை மிக நெருக்கமாக அணுகி அக்கட்சிகளின் மூலமாகத்தான் இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்றமுடியும் என்பதுதான் சாத்தியமாக இருக்கும் என கருதுகின்றேன். அப்பணியை இன்னமும் நாம் போதுமானதாக மேற்கொள்ளவில்லை என்பது எமது பக்கத்தில் இருக்கும் குறைபாடாகும்.

தமிழகத்தில் உள்ள சில தமிழின உணர்வாளர்கள் இந்திய அரசின் இந்த நிலைப்பாடு குறித்து சில அறிக்கைகளை வெளியிடுகின்றனர். ஆனால் தமிழக முதல்வர் கருணாநிதி இந்த விவகாரம் குறித்து எந்தவித கண்டனத்தையோ அல்லது கருத்துக்ளையோ வெளியிடாது மௌனம் காட்டுகின்றார். இதன் காரணமாகத்தான் தி.மு.கவிலிருந்து பா.ம.க தற்போது பிரிந்து சென்றிருக்கிறது என்று கருதலாமா?

தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு இன்று எப்படி உள்ளது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். பா.ம.க. பிரிந்த பின்னர் தி.மு.க முழுமையாக காங்கிரசை நம்பியே கூட்டணி ஆட்சியை நடத்த வேண்டிய நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.

பா.ம.க, திராவிடர் கழம், விடுதலைச் சிறுத்தைகள், நெடுமாறன் ஐயாவின் தமிழர் தேசிய இயக்கம் போன்ற கட்சிகள் கலைஞரின் அருகில் இருந்து கொண்டு ஈழப் பிரச்சினையில் ஒரு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே என் போன்றவர்களின் கருத்து.

கலைஞரின் போக்கில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. ஏனெனில் அவரும் ஏனைய கட்சிகளின் பலத்தை நம்பியே செயற்பட முடியும். வைகோ, இராமதாஸ், நெடுமாறன், திருமாவளவன், வீரமணி ஆகிய ஐவரும் கலைஞரின் அருகில் இருந்து கலைஞருக்கு ஆதரவாக நின்று ஈழத்தின் செய்திகளை எடுத்துக்கூறினால் தமிழகத்தில் ஒரு மாற்றம் வரும்.

இவர்கள் ஐவரும் மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள். பெரிய கட்சியைச் சேர்ந்தவர்கள். நான் சில நூறு அல்லது ஆயிரம் இளைஞர்களிடம் மட்டும் தொடர்பு வைத்திருக்கும் ஒருவராகவே உள்ளேன். ஆனால், மேற்படி ஐவரும் பெரிய இடங்களில் செல்வாக்குள்ளவர்கள்.

எனவே இவர்கள் ஐவரும் கலைஞரை அணுகி ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பது எனது அழுத்தமான கருத்தாகும்.

ஆனால் இதற்கு எதிராக வைகோவும் நெடுமாறன் ஐயாவும் கலைஞருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றனர். தற்போது இராமதாசும் எதிர்நிலைக்கு போய்விட்டார். இப்படி எதிர்நிலையில் இருந்துகொண்டு சொல்லும்போது ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது.

எனவே ஒரு மாற்றம் வரவேண்டும் எனில் கலைஞருக்கு ஆதரவாக இவர்கள் இருக்க வேண்டும். அந்த ஆதரவை வைத்துக்கொண்டுதான் அவர் காங்கிரசையும், பா.ஜ.கவையும் சமாளிக்க முடியும். தற்போது இவர்களின் ஆதரவு அனைத்தும் விலகிவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியை மட்டுமே நம்பி செயற்படும் அவர், காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து ஒரு அறிக்கை வெளியிடுவார் என்று எதிர்பார்க்க முடியாது.

இதுதான் அங்கே உள்ள ஈழ மக்களுக்கு எதிரான சூழ்நிலை.

தனது அரசியல் எதிர்காலம், தனது குடும்பத்தின் எதிர்கால நலன் ஆகியனவற்றினை கருதாமல் தமிழக முதல்வர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பார் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா?

தமிழக முதல்வரை மட்டுமே நம்பி ஒரு நாட்டின் அரசியலை நடத்த முடியாது. தமிழக முதல்வரின் அல்லது ஒரு கட்சியின் தலைவரின் அரசியல் என்பது பெரும்பான்மையான மக்களின் போக்குச் சார்ந்ததாகத்தான் இருக்க முடியும். நான் மேற்கூறிய ஐந்து பேரும் அரசியல் செல்வாக்கு பெற்றவர்கள்.

எனவே இவர்கள் ஈழத் தமிழர்கள் விடயத்தில் தமிழகத்தில் ஒரு எழுச்சியைக் கொண்டு வருவதன் மூலம்தான் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என நம்புகின்றேன்.

என்னதான் நாம் கூறினாலும் தமிழகத்தில் கலைஞரும் ஜெயலலிதாவும்தான் இன்று செல்வாக்கு மிக்க பெருந்தலைவர்களாக இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. இவர்களில் ஜெயலலிதா நேர் எதிர் கருத்துடையவராக – தமிழீழ மக்களை அழித்துவிட வேண்டும் என்ற கருத்துடையவராக இருக்கின்றார்.

எனவே கலைஞரைச் சார்ந்தும், அவரை அணுகியும், அவருக்கு சில செய்திகளை எடுத்துச்சொல்லியும் அவருக்கு நெருக்கமாக இருந்துகொண்டு அதன் மூலமாக ஒரு மாற்றத்தைக் கொண்டுவரலாம். கலைஞர் ஈழத்திற்கு எதிரானவர் இல்லை என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். எனினும் அவரின் கட்சி, அரசியல் சூழ்நிலைகளை நாம் மறந்து விடக்கூடாது.

ஈழத்தின் செய்திகளை கலைஞருக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லக்கூடிய கட்சிகள் இன்று அவரிடத்தில் இல்லை. திருமாவளவனைத் தவிர வேறு எவரும் இன்று அவருடன் ஈழச் செய்திகள் குறித்து பேசும் நிலையில் நெருக்கமாக இல்லை. எனவே அனைவருமாக இணைந்து இப்பணியைச் செய்ய வேண்டும்.

தமிழின உணர்வாளர்கள் ஒன்றிணைவதைத் தடுக்கும் காரணிகள் என்ன?

தமிழின உணர்வாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அரசியல் கட்சி சார்ந்தவர்களாக இருப்பதே இதற்கு காரணம். அவர்கள் கட்சி நலனை மறைத்து விட்டு வெறுமனே ஈழத்தமிழர் உணர்வாளர்களாகச் செயற்படுகின்றனர் என்று சொல்ல முடியாது. ஈழத்தை ஆதரிக்கும் வைகோ இன்று ஜெயலலிதாவை ஆதரிக்கின்றார். ஈழத்தை ஆதரிக்கும் நான் கலைஞரை ஆதரிக்கின்றேன். அதாவது, இந்த கட்சிப் பாகுபாடு என்பது வெளிப்படையாக இருக்கின்றது. இந்த கட்சி பாகுபாட்டை மறைத்துவிட்டு அனைவரும் ஈழத் தமிழர் விடயத்தில் ஒன்றிணைய வேண்டும்.

தி.மு.கவை இன்று நெடுமாறன் ஐயா விமர்சிப்பதால் அவரது ஈழத்தமிழர் தொடர்பான செயற்பாடுகளுக்கு பின்னால் தி.மு.கவினர் திரள்வதற்கு சிக்கல் உள்ளது. ஜெயலலிதாவின் ஆட்சியில் கடுமையான பொடாச் சட்டம் இருந்தபோது கடுமையாகப் பேசாமல் இருந்து விட்டு இப்போது பேசுவதற்கான உரிமை வந்த பின்னர் கலைஞரையே கடுமையாக பேசுவது என்பது ஜனநாயக உரிமை என்று வைத்துக்கொள்கின்றனர்.

ஈழத் தமிழர் விடயத்தில் நெடுமாறன் ஐயாவுக்குப் பின்னால் இன்று தமிழின உணர்வாளர்கள் திரளாமைக்கான பிரதான காரணம் நெடுமாறன் ஐயா இன்று வைகோவுடன் இணைந்து கலைஞரை கடுமையாகத் தாக்கிக்கொண்டிருப்பதே ஆகும். இது போன்ற சிக்கல்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.

எனவே தமிழின உணர்வாளர்கள் ஒன்றிணைவதற்கு தமிழ் நாட்டில் இருக்கும் கட்சிப் பிரிவினைகள் தடையாக இருக்கின்றன என்பதுதான் உண்மை.

ஈழத் தமிழர் விடயத்தினை எடுத்துச் சொல்வதற்கு தமிழகத்தில் இருக்கும் ஊடகங்களை எந்த வகையில் பயன்படுத்த முடியும்?

அதுதான் நாம் செய்ய வேண்டிய முதற்பணி எனக் கருதுகிறேன். அங்குள்ள பெரும்பாலான ஊடகங்கள் உண்மையைச் சொல்லவில்லை. தமிழீழ மக்களுக்கு ஆதரவாக எதனையும் சொல்ல வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டும். அது மிகப்பெரிய ஆதரவை நமக்கு திரட்டித் தரும்.

உண்மையைச் சொல்வதற்கும் அவற்றை வெளியிடுவதற்கும் அங்கே பல்வேறு தடைகள் இருக்கின்றன. ஈழத்தில் உயிரைப் பணயம் வைத்துப் போராடுகின்றனர். இங்கே நாம் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு கடுமையாகப் போராட வேண்டி உள்ளது.

புலம்பெயர் தமிழ் மக்கள் எந்த வகையில் ஒரு ஊடகத்துடன் ஒரு கருத்தாடலை ஏற்படுத்த முடியும்?

ஊடகங்கள் மீது நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஊடகங்களில் வருகின்ற செய்திகளை மக்கள் அப்படியே நம்புகின்றனர். நாம் பொய்யையோ அல்லது திரித்தோ சொல்ல வேண்டியதில்லை. உண்மையைச் சொல்வதற்கு ஊடகங்கள் தேவை என்பதுதான் இன்றைய எமது தேவை.

தற்போதுள்ள ஊடகங்கங்களைக் கவர்வது என்பது ஒரு வழி. அதேநேரம் புதிய ஊடகங்களை உருவாக்குவது என்பது இன்னொரு வழி. அதற்கு மிகப்பெரிய பணத் தேவை உள்ளது. இருந்தாலும் அதனை நாம் உருவாக்க வேண்டிய கட்டத்திற்கு வந்திருக்கின்றோம்.

எமக்கு என்று உண்மையான வலிமையான ஊடகத்தை உருவாக்க வேண்டும். வலிமையான ஊடகங்கள் தேவை. இரண்டாயிரம், மூவாயிரம் பேருக்கு செல்லக்கூடிய பத்திரிகைகள் இன்று எம்மிடம் இருக்கின்றன. ஆனால் அவைகளால் ஒரு கருத்து மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது.

எனவே லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகக்கூடிய பத்திரிகைகள் தேவை. அதேநேரம் லட்சக்கணக்கான நேயர்களைக் கவரும் தொலைக்காட்சிகளில் வாரத்திற்கு ஒரு அரை மணிநேரம் அல்லது ஒரு மணிநேரம் என நாம் எமக்கான நிகழ்ச்சிகளை அமைத்துக்கொள்ளும் நிதி வலிமையைப் பெற்றாக வேண்டும். அதுதான் ஒரு முதல் மாற்றத்தை உருவாக்கும்.

அடுத்து ஈழத்தின் போராட்ட நியாயத்தை உணர்ந்துள்ள தமிழின ஆதரவாளர்கள் ஏனைய விடயங்களில் மாற்றுக் கருத்து இருந்தாலும் ஈழத்தமிழர் போராட்ட விடயத்தில் ஒருமித்த கருத்தை வெளியிடும் நிலை வரவேண்டும்.

மேற்கூறிய இரண்டு விடயங்களும் நடக்குமானால் கண்டிப்பாக தமிழக மக்களின் போக்கிலும் எண்ணத்திலும் கண்டிப்பாக ஒரு மாற்றம் வந்து சேரும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான கடமை நான் உட்பட அத்தனை பேருக்கும் இருக்கின்றது என்பதையும் நான் அறிவேன்.

எனினும் என் போன்றவர்களுக்கு இருக்கும் வலிமை மிகக் குறைவானது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறேன். எனவே வலிமை கூடுதலாக இருப்பவர்கள் இதற்கான முன்முயற்சியை எடுக்க வேண்டும்.

இத்தகைய ஊடகத்தை சட்ட ரீதியான சிக்கல்களை கடந்து தமிழகத்தில் உருவாக்க முடியுமா?

இப்படியான சிந்தனைகளை நாம் நிதானமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். குறிப்பாக வெளிநாடுகளில் உள்ளவர்கள், ஆர்வம் உள்ளவர்கள் தொலைபேசி மூலமோ அல்லது மின்னஞ்சல் மூலமோ தமிழகத்தில் உள்ள பொதுவானவர்களைக் தொடர்புகொண்டு முழுமையாக ஒரு மக்கள் பத்திரிகையாக இதனை உருவாக்க வேண்டும். அதேபோன்று வாரம் ஒருமுறையாவது உண்மைகளைச் சொல்லும் வாய்ப்பை ஏதாவது ஒரு வடிவிலேனும் பெற்றாக வேண்டும். அதற்கான சிந்தனைகளை நாம் தொடங்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம்.

தமிழகத்திற்கு அப்பால் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் தமிழர்களிடமுள்ள நியாயத்தை எந்த வகையில் எடுத்துச் செல்வது?

இதுவொரு சிறந்த முயற்சி. நானும் தனிப்பட்ட முறையில் இத்தகைய ஒரு முயற்சியை மேற்கொண்டேன். எனினும் வேலைப்பழு காரணமாக என்னால் அப்பணியைச் செம்மையாக முடிக்க முடியவில்லை.

மிகச் சிறிய முயற்சியாக உண்மைகளை எல்லாம் தொகுத்து "ஈழம் இதயமுள்ளோர் பார்வைக்கு" என்ற புத்தகத்தினை வெளியிட முயற்சித்தேன். அப்புத்தகத்தை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழிபெயர்த்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொண்டுசெல்வதே எனது முயற்சியாகும்.

டில்லிக்குச் சென்று அதிகாரிகளை மட்டுமன்றி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து அமர்ந்து பேசுவது என்கிற முயற்சிகளில் எல்லாம் ஈடுபட வேண்டும் என்ற திட்டம் உள்ளது. அதனை நாம் ஒரு கூட்டாகக்கூட மேற்கொள்ளலாம் என்றும் கருதினேன்.

மிகக் கடுமையான வேலைகளாலும் வெளிநாட்டுப் பயணங்களினாலும் அந்த முயற்சி தடைப்பட்டுப் போய் நிற்கின்றது. ஆனாலும் அதனைச் செய்ய வேண்டும். இது ஒரு தனிப்பட்ட மனிதனின் முயற்சியில் நடந்து விடாது. பலரும் இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட வேண்டும். நாடாளுமன்றத்தில் இப்படிப்பட்ட கருத்துகளை உருவாக்கும் தன்மையைப் பெற்றாக வேண்டும்.

பல்வேறு முனைகளில் நாம் முயற்சித்தால் தான் பலன் கிடைக்கும். கலைஞரை மட்டும் நம்பிக்கொண்டிராமல் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்ததை தங்களின் எல்லைகளில் இருந்துகொண்டே செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மாற்றம் கண்டிப்பாக வரும்.

கலைஞர் மீதான ஈழத்தழிழ் மக்களின் எதிர்பார்ப்போடு ஒப்பிடும் இடத்து பிற விடயங்களை ஈழத்தமிழர்கள் கவனியாது உள்ளனர் என கருதுகின்றீர்களா?

தமிழ்நாட்டில் இரு பெரும் தலைவர்கள்தான் உள்ளனர். ஜெயலலிதாவை எவரும் அணுகவே முடியாது. கலைஞரைத்தான் நாம் அணுகமுடியும். கலைஞரிடத்தில்தான் உண்மைகளை இயல்பான நிலைமைகளை எடுத்துச்சொல்ல முடியும். இன்று அவருக்கு முழுமையான செய்திகள் போய்ச் சேரவில்லை.

எனவே அதற்கான முயற்சி என்பது ஒருவழி.

இன்னொரு வழியில் நாம் ஊடகங்களைக் கைப்பற்றுவது, நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்தில் இந்தியில் மொழிபெயர்த்து இந்தப் பிரச்சினைகளைக் கொண்டுபோவது, அங்கே இருக்கும் ஒலி, ஒளிப்படங்களைக் கொண்டுபோவது என்கிற முயற்சிகளை எல்லாம் நாம் எடுக்க வேண்டும்.

புலம்பெயர் நாடுகளில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்வுகளில் தமிழ் மக்கள் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் குறித்து நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?

இந்நிகழ்வுகள் மிகத் தேவையான ஒன்று. மிகச் சரியான ஒன்று. 2002 ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் நானும் பங்குகொள்ளும் ஒரு பெரிய வாய்ப்பை பெற்றேன். அதற்குப் பின்னர் எனது கடவுச்சீட்டு பறிக்கப்பட்டு நான் வெளிநாடு செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதனால் நான் அப்போது ஏனைய நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியவில்லை.

இப்போது இத்தாலியில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுக்காக அழைத்தார்கள். எனினும் அமெரிக்காவில் ஒரு கூட்டத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்ட காரணத்தினால் அதற்கு இசைவு தெரிவிக்க முடியவில்லை.

உலகம் முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த பொங்கு தமிழ் நிகழ்வு பெரியதொரு எழுச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் எமது நியாயத்தை எடுத்துச் சொல்வதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கின்றது. தமிழ் மக்கள் ஒன்றாக ஓரணியில் நிற்கின்றனர் என்பதனை சிங்கள அரசுக்கு எடுத்துக்காட்டுகின்ற நிகழ்ச்சியாகவும் அது இருக்கின்றது.

இந்த பொங்கு தமிழ் நிகழ்வு என்பது சரியான நேரத்தில் தேவையான நிகழ்வு என்பதில் எதுவித மாற்றுக்கருத்தும் எனக்கு இல்லை.

எனவே ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறும் இந்த பொங்கு தமிழ் நிகழ்வுகளில் கலந்துகொள்வதனை தமிழ் மக்கள் தமது கடமையாக கருத வேண்டும். வேறு எந்தப் பணி இருந்தாலும் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு பொங்கு தமிழ் நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டும்.

உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டிருக்கும் போராளிகள் இருக்கும்போது எம்மால் செய்யக்கூடிய ஒரு கூட்டத்திற்கு போய் வருவது என்பதை ஒரு அடிப்படையாகச் செய்ய வேண்டும். அதனை புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்கள் சரியாகவே செய்துகொண்டிருக்கின்றனர் என்றே நான் கருதுகின்றேன்.

ஈழப்போராட்டம் மூன்று முனைகளில் தங்கியுள்ளது.

அதன் முதல் முனையானது ஈழத்தில் உள்ளது. அங்கே உயிரைப் பணயம் வைத்து அது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இரண்டாவது முனையானது புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடையே தங்கியுள்ளது. அவர்கள் காட்டும் தார்மீக ஆதரவு குறிப்பாக தார்மீக அடிப்படையிலும் நிதி அடிப்படையிலும் பிற வகையிலும் தங்கியுள்ளது.

மூன்றாவது முனையானது இந்தியாவில் இருக்கின்றது. இந்திய அரசின் போக்கில் ஏற்படும் மாற்றமும் ஈழப் போராட்டத்திற்கு மிகப்பெரிய தேவையாக இருக்கின்றது. இந்திய அரசின் மாற்றம் என்பது தமிழக கட்சிகளின் மாற்றத்தை பொறுத்ததாக அமையும். தமிழகக் கட்சிகளின் மாற்றம் என்பது தமிழக மக்களின் மாற்றத்தை பொறுத்ததாக அமையும்.

இந்த மூன்று முனைகளில் முதல் முனை மிகச்சரியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இரண்டாவது முனையை மேலும், மேலும் உறுதிப்படுத்த வேண்டிய கட்டத்தில் இருக்கினறோம். மூன்றாவது முனையில்தான் எமது போராட்டம் மிகக் கடுமையாகவும் பின்னடைந்தும் இருக்கின்றது.

இதனை நான் வெட்கத்தோடும் வேதனையோடும்தான் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த மூன்று முனைகளிலும் தங்கியுள்ள ஈழப் போராட்டம் மூன்று முனைகளிலும் சரி செய்யப்பட்டு அதன் வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டும் என்றார் அவர்.

Wednesday, June 25, 2008

பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா? நாமே தீர்மாணிக்கலாம்??!!

நம்ம சைனா நன்பர் பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை நாமே தீர்மானிக்கல்லாம் என்றார்!, பெண்ணின் வயது மற்றும் கருவுரும் மாதம் (மாதவிலக்கில் இருந்து பொதுவாக இரு வாரம் கழித்து) கொண்டு ஒரு அட்டவணையம் கொடுத்தார். நீங்களும் ஆராய்ந்துத்தான் பாருங்களேன்.

18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 AGE
G B G B G B B G B G B G B B January
B G B G B B G B G B G B G G February
G B G G B G B B B G B G G B March
B G B G G B B G G B G G G G April
B G B G B B G G G G G B G G May
B B B G G G B B B G G B G G June
B B B G G B B G G B B B G G July
B B B G B G G B B B B B G G August
B B B G G B G B G B B B G G September
B B G G G B G B G B B G G G October
B G B G G B G B G G G G B G November
B G B G G G G B G B G G B B December


32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 AGE
B G B B G B G B G B G B B G January
G B G B B G B G B G B G B B February
B B B G B B G B G B G B G B March
G B G B G B B B B G B G B G April
G G G G B G B B G B G B B G May
G G G G G B G G B G B G B G June
G G G G G G B G B B G B G B July
G B G B G B G B G B B G B G August
G G G G B G B G B G B B G B September
G G G G B B G B G B G B B G Gctober
G G B B B G B G B G B B G B November
B B B B B B G G G B G B G B December

Saturday, June 14, 2008

காதல் காதல் காதல்



கண்மணி என்
கண்ணின் மணி
காலமெல்லாம் வேண்டும்
உந்தன் மடி

பனி இரவு
பால் நிலவு
குளிர் பொய்கை,
அருகில் நீ இன்றி
எதுவும் சுகிக்கவில்லை

எத்தனை நடு இரவில்
பக்கத்தில் தேடிப்பார்த்து
ஏமாறுவது

காதல் தீ
நெருங்கினால் குளிர்கிறது
விலகினாலோ சுடுகிறது

மலர்ந்தப் பின்
மொட்டாவதில்லை
கட்டவிழ்ந்தப் பின்
காதல் மனம்
கட்டுப்படுவதில்லை

காதோடு உன் குரல்
விழித்தால் உன் முகம்
மார்போடு நீ
நம் இதையங்கள்
உறவாடட்டும்

பிரிவு காதலை
வளர்க்குமாமே
நம் காதல்
வளரவேண்டிய
நிலையில் இல்லை

இனி
உன் பார்வை
படும் தூரம் தாண்டி
ஓர் பயனம் வேண்டாம்

Saturday, June 7, 2008

காதல் தோல்வி, தற்கொலை என்றால்- கொஞ்சம் கோவமாகத்தான் பதில் வரும் என்னிடம்.

காதல் உன்னை காயப்படுத்தியதாக சொல்பவளே
நேசம் உன் நெஞ்சில் உள்ளதா சொல்?

நீ பூமியில் தொலைத்ததை
வானத்திலா பெறப்போகிறாய்?

தாயின் மார்பைக் கடித்துவிட்டு
வீரிடும் குழந்தைக்கூட
தாலாட்டுப் பாடும்
தாயைப் பார்த்திருக்கிறாயா?.

உன்னால் ஆராதிக்கப்படாத
இந்த உலகம்
உன்னை ஆராதிக்கும்
என்று எப்படி எதிப்பார்க்கிறாய்.

பசை இல்லாத் தலையும்
பஞ்சடைத்த கண்களும்
உன் பார்வயில் பட்டதில்லையா?
அவர் கேசம் கோதும்
நேசம் உண்டா உன்னிடம்?!
அவர் ஆடைத்துவைத்து
ஒரு வாய் அமுதூட்டுமா
உன் கைகள்?!!.

ஒரு குருடனின் கைப்பிடித்து
நிலவைச் சொல்லி இருக்கிறாயா?
இரவெல்லாம் விழித்திருப்பவளே
கொஞ்ச நேரம் அவனுக்கு
பார்வையாக இருந்திருக்கிறாயா?.

உறவுகளிடம் கூட ஒட்டாதிருப்பவளே
உறவுகளே இல்லாத்தவர்களிடம்
கைக்கோர்த்திருக்கிறாயா?
அவர் கண்ணீர் துடைத்திருக்கிறாயா?!.

கண்களில் கருனை மை தடவிப்பார்
தேகம் மறைக்க ஆடையின்றி
இருக்குமொரு கூட்டம்
ஒரு கைக்குட்டையேனும்
நெய்ததுண்டா உன் கைகள்?.

இரைப்பையில் காற்றை
நிறைப்பி இருக்குமொரு கூட்டம்
ஒரு கவளம் விளைத்ததுண்டா நீ?.

நீ உண்டதெல்லாம்
நீ விளைத்ததா?
நீ சுவாசித்தது
தேகம் கழுவியதெல்லாம்
உன்னுடையவையா?

உன்னை சுமந்தவளுக்கும்
சுமப்பவளுக்கும்
இயற்கை உனக்கு கொடுத்த
ஒவ்வொன்றுக்கும்
ஒரு கடன் இருக்கிறது.

உன் வயதுக்கொரு
மரம் வளர்த்தேனும்
அதை அடைக்கும்
எண்ணமுண்டா
உன்னிடம்.

ஏனடீ கண்களை
மூடிக்கொண்டு
உலகம் இருட்டென்கிறாய்!.
உன்னால் ஒதுக்கப்பட்டது
உலகில்
ஓராயிரம் கோடி
உன்னை ஒதுக்கியதாய் சொல்லுதல்
உண்மைக்கு புறம்பு.

அன்புக்கு ஏங்கிடும் உயிர்கள்
பல்லாயிரம் கோடி
உன் கைகள் நீண்டால்
அதில் ஒரு நூரேனும்
சுகப்படாதா??.

அன்பு உன் கண்களில் இருந்தால்
இந்த பூமியைத் தழுவிக்கிடக்கட்டும்
உன் கைகள்.

நான் சொல்லவந்ததை எல்லாம்
சொல்லிவிட வில்லை
சொல்லக் கூடாததையும்
சொல்லிவிடவும் இல்லை.

கடைசியாக ஒன்று,
பூக்களை மட்டும்
நேசிப்பது
சுயநலம்.
எனவே,
முற்களையும்
முத்தமிடட்டும்
உன் உதடுகள்.

Wednesday, June 4, 2008

புதிய சித்தர் பாடல் 1 (என்ன களப்பிராரே சந்தோசமா??)

காதல் கலைந்து போகும்
காமம் நிலைத்திருக்கும்
காமம் நிலைத்திருக்க
வேறு காதல் வரும்
நீரும் ஆவியும் போல்
காதலும் காமமும்
ஒன்றுக்குள் ஒன்று.

நீதி: இயற்கையின் படைப்பில் காதலும் காமமும் வேறு வேறுல்ல.

Monday, May 26, 2008

உலகின் வலிமையான ஆயுதம் பெண்களே?!!!!?

எத்தனைப் புயல்
எத்தனைப் பூகம்பங்கள்
எத்தனை எத்தனை யூகமாய்
எத்தனைப் போர்
எத்தனை இரத்தம்.

எத்தனை எழுப்சி
எத்தனை வீழ்ச்சி.

உங்கள் கண்களில்
நீரும் உண்டு
நெருப்பும் உண்டு.

உங்கள் வார்த்தைகளில்
சண்டையம் உண்டு
சமாதானமும் உண்டு.

உங்கள் நெஞ்சிக்குழிக்குள்
அமுதும் உண்டு
நஞ்சும் உண்டு.

உறவும் பகையும்
உங்கள் கைகளில்.

உங்களால் காயம்பட்டவர்கள்
புன்னகைத்திருக்கிறார்கள்,
உங்கள் புன்னகையால்
எத்தனையோப்பேர்
காயம்பட்டுருக்கிறார்கள்.

சித்தர்கள் கூட
சித்தம் கலங்கி
பித்தர்கலானார்கள்.

உலகின் மிகப் பெரியப் பூ
பெண்களே
உலகின் வலிமையான ஆயுதமும்
பெண்களே.

நீங்களும் சமுத்திரமும் ஒன்றுதான்
உங்களில் அமிழ்ந்து கிடப்பவை
யாவும் அறிந்தவர் யாருமில்லை.

நீங்களும் வானமும் ஒன்றுதான்
உங்களின் எல்லைகளைக் கண்டவர்
யாருமில்லை.

உயிரின் அத்தியாவசியம் நீங்கள்
உயிர்க் கொல்லிகளும்
நீங்கள் தான்.

ஒவ்வொருவர் வெற்றிக்குப் பின்னாலும்
நீங்கள் இருக்கிறீர்கள்
ஒவ்வொருவரின் தோழ்விக்குப் பின்னாலும்
நீங்களே இருக்கிறீர்கள்.

உயிரைக் கொடுப்பதும்
நீங்கள்தான்
பேணி வளர்ப்பதும்
நீங்கள்தான்
அழித்தொழிப்பதும்
நீங்கள்தான்.

படைத்தல்
காத்தல்
அழித்தல்
யாவும் பெண்ணென்றால்
ஆண்டவன்
என்பது
யார்
இங்கே.

Friday, May 23, 2008

மன்னிச்சுக்கங்க, இது ஆண்களுக்கு மட்டும் (நம்ம சீனா நன்பர் சொன்னது)

இருவது வயதுக்கு உட்பட்ட வர்களுக்கு போருந்தாது.

20(வயது) x9 = 18; ( 10 நாட்களுக்கு 8 முறை)
30(வயது)x9 =27; (20 நாட்களுக்கு 7 முறை)
40(வயது)x9 =36; (30 நாட்களுக்கு 6 முறை)
50(வயது)x9 =45 ( 40 நாட்களுக்கு 5 முறை)
60(வயது)x9 =54 ( 50 நாட்களுக்கு 4 முறை)
70(வயது)x9 =63 ( 60 நாட்களுக்கு 3 முறை)
80(வயது)x9 =72 ( 70 நாட்களுக்கு 2 முறை)
90(வயது)x9 =81 (80 நாட்களுக்கு 1 முறை)
100(வயது)x9=90 -ஆட்டத்தில் இல்லை

Monday, May 19, 2008

என் எழுத்துக்களின் கொஞ்சம் வன்முறை நெடி...

என் எழுத்துக்களின் கொஞ்சம் வன்முறை நெடி இருப்பதாக வருத்தப்பட்ட நன்பனே, அகிம்சைக்கான வரையறை எல்லாம் மாறிப்போனதை அறியாயோ?. ஒரு கண்ணத்தில் அடித்தால் மறுகண்ணத்தைக்காட்டாதே, மீண்டும் அடிபடுவாய். மோதி மிதித்திட்டிப் பாப்பா என உன் பிள்ளைக்குச் சொல்லிக்கொடு, நீயும் ரோத்திரம் பழகு. எனென்றால்,"வன்முறைக் எதிராக நடத்தப்படுகிற வன்முறை அகிம்சை தான், வன்முறையை சகித்துக்கொள் என்கிற அகிம்சையும் வன்முறை தான்."



ஓடப்பரெல்லாம் உதையப்பராகிவிட்டால்..... ஒப்பப்பர் ஆகிடுவார் உணரப்பா.

Sunday, May 18, 2008

ஒரு நல்ல மருத்துவர் பற்றி சொல்லப்போகிறேன்

பொதுவாக வானம் பார்த்த பூமி, பெரும்பாலும் சிறு விவசாயி அல்லது விவசாய கூலிகள், வறுமை, அறியாமை, மூடநம்பிக்கை இப்படி எல்லா விதத்திலும் சபிக்கப்பட்ட மழைவாழ் மக்கள் வாழும் இடம் தான், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிட்லிங்கி எனும் கிராமம். மருத்துவமனை என்றால் 50 கிலோ மீட்டர் பயணித்து அரூர் தான் போகவேண்டும், 1993ல் ஒரு நாளைக்கு மூன்று முறை தான் பேருந்து வந்து செல்லும், இன்றைக்கும் 5 அல்லது 6 முறை தான் பேருந்து வந்து செல்கிறது என்பது வேறுவிடையம். 90-களில், சிட்லிங்கி மற்றும் சுற்று வட்டத்தில் நூற்றுக்கு பதினைந்து பிள்ளைகள் தன் முதல் பிறந்த நாளை கொண்டாடும் முன்னே இறந்துப் போனார்கள். இந்த பாவப்பட்ட மக்களுக்காகவே 1993ல் வந்து சேர்ந்தனர் மருத்துவ தம்பதியர் ரெகி சார்சி (Regi George) மற்றும் லலிதா சார்சி (gynaecologist). எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் கடுமையாக போராடி, உண்மையாக உழைத்ததால் சிறு சிறு பொருளாதார உதவிகள் கிடைக்கப் பெற்று மருத்துவமனையை அமைத்து மக்கட்பணியாற்றி வருகிறார்கள். Reader's Digest இவர்களை பற்றி 2001 செப்டெம்பரில் sittilingi's Good Doctors என்ற தலைப்பில் கவர் ஸ்சொரி மற்றும் மருத்துவ தம்பதியர் படங்களையும் அட்டைப்பட செய்தியாக வெளியிட்டு பெறுமை தேடிக்கொண்டது. இன்றைக்கு தினமும் நூற்றுக்கனக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்களென்றாலும், வேலை பளுவை பகிர்ந்துக்கொள்ள வேறு எந்த மருத்துவரும் யாரும் இது வரை முன்வரவில்லை என்பது துயரமே. இவர்களை பற்றி தெரிந்துக்கொள்ள, முடிந்த உதவி செய்திட பார்வையிடவும் http://www.tribalhealth.org/ .

Thursday, May 1, 2008

ஞாநியின் சூழ்ச்சியும், திருமாவின் நேர்மையும் வீரமும்

சமீபத்தில் குமுதம்.காமில் விடுதலைச் சிருத்தைகள் அமைப்பின் தலைவர் திரு. திருமாவளவன் அவர்களின் செவ்வியை, "ஞாநி பேசுகிறேன்" என்ற நிகழ்ச்சியில் காணநேர்ந்தது. அதில், பிரபாகரன் என்ற திரைப்படத்தை இயக்கிய சிங்கள இயக்குநரின் கருத்துச் சுதந்திரத்தை தடுப்பது நியாயமா ? என்று ஞாநி அவர்கள் வாதாடினார். ஞாநியின் சூழ்ச்சியும், திருமாவின் நேர்மையும் வீரமும் அந்த உறையாடலில் நன்றாகத் தெரிந்தது. பொய்யான புராணங்கள் எழுதி ஒரு சமுதாயத்தையே ஏமாற்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயிறு வளர்த்தவர்களிடம் இதைத்தான் எதிர்ப்பார்க்க முடியும் என்பது உண்மை. நிகழ்ச்சியின் முடிவில், கவிஞர் அண்ணன் அறிவுமதி அவர்கள் தன் இனைய தளத்தில் சமிபத்தில் எழுதிய வரிகள் தான் நினைவுக்கு வந்தது. அவை,
"எங்கள் வீட்டுக்குள் எங்கள் பெண்களைக் கெடுக்க வருகிற மிருகங்களின் ஆண்குறிகளை வெட்ட வேண்டும் என்பது எங்களின் ஆத்திரம் ! இல்லை.. இல்லை…அந்தக் குறிகளுக்கு ஆணுறைகள் மாட்டிவிட வேண்டும் என்பது உங்களின் சாத்திரம். (http://arivumathi.wordpress.com/).

Wednesday, April 9, 2008

தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும்

1 = ONDRU -one
10 = PATHU -ten
100 = NOORU -hundred
1000 = AAYIRAM -thousand
10000 = PATTAYIRAM -ten thousand
100000 = NOORAYIRAM -hundred thousand
1000000 = PATTU NOORAYIRAM - one million
10000000 = KOODI -ten million
100000000 = ARPUTHAM -hundred million
1000000000 = NIGARPUTAM - one billion
10000000000 = KUMBAM -ten billion
100000000000 = KANAM -hundred billion
1000000000000 = KARPAM -one trillion
10000000000000 = NIKARPAM -ten trillion
100000000000000 = PATHUMAM -hundred trillion
1000000000000000 = SANGGAM -one zillion
10000000000000000 = VELLAM -ten zillion
100000000000000000 = ANNIYAM -hundred zillion
1000000000000000000 = ARTTAM -?////
10000000000000000000 = PARARTTAM --anyboby know
100000000000000000000 = POORIYAM -<>?#%^&
1000000000000000000000 = MUKKODI -&^*^%^#
10000000000000000000000 = MAHAYUGAM -????????????????

(நன்றி ஆத்ரேயன்).

Tuesday, March 25, 2008

நட்பு

என்னால் முற்களும் மலரும்
எனக்கொன்றென்றால்
மலரும் முள்ளாகும்

முள்ளை முள்ளால் தான்
எடுக்கவேண்டு மென்பார்கள்
நான் மட்டும் தான்
முற்களை பூக்களால் எடுக்கிறேன்

இயந்திர வாழ்க்கையில்
இதையத்திற்க்கு ஒத்திடம்
என்னிடம் கிடைக்கும்

காதலில் கூட
கொடுக்கல் வாங்கல்
உறவுகளோ பந்த பாசம்
உறவுகள் உணர்வுகள் தாண்டி
நேசக்கரம் நீட்டுபவன்
நான் மட்டும் தான்

என் கரம் பற்றிக்கொண்டால்
பயனுண்டா தெரியாது
பயன்பாடு பாராமல்
பழகுபவன் நான்

என்னை பொருத்தவரை
சோற்றுக்கில்லார் கூட
ஏழையில்லை
சோர்ந்த போது -கொஞ்சம்
சாய்ந்து கொள்ள
என் தோள் கிடைக்காதவரே
ஏழை

எனக்கு உருவம் கிடையாது
உணரத்தான் முடியும்
நான் காற்றும் கிடையாது
ஆனால் சுவாசம்

எனக்காக உயிரை விட்டவர்கள் கூட
இன்னும் வாழ்ந்து கொண்டுத்தான் இருக்கிறார்கள்
ஏனென்றால் வாழ்க்கையே நான் தான்

நான் வித்தியாசமான
சிலந்தி வலை
என்னில் விழுந்தவர்களை
நானே காக்கிறேன்

பற்றிக்கொள்ள ஒரு
கொம்பு கண்டவுடன்
சுற்றிக்கொள்வதில்லை நான்
வெட்டிக்கொன்ற போதும்
விட்டு விலகாதிருப்பதும் நானே

ஒளியில் உறவாடி
இருளில் மறையும்
நிழலல்ல நான்
உயிரில் உறவாடி
உன்னோடிருப்பவன்

என் பெயர் சொல்லி
வருபவரெல்லாம் நானில்லை
ஆராயாமல் அனுமதிக்காதீர்கள்

அரிதாரம் இல்லாத
அழகு நான், -என்னை
உங்கள் உச்சந்தலையில்
சூடிக்கொண்டால்
உங்கள் நிழல் கூட
மாற்றான் காலில்
விழ தேவையில்லை

Monday, March 24, 2008

நெஞ்சி பொறுக்குதில்லையே...

செந்தமிழ் நாடெனும் பொழ்தினிலே
வெந்தனல் வந்து பாயுது காதினிலே

குரல் கொடுத்தும் குறைய வில்லை
இலங்கையில் உயிர்பறிப்பின்னும் தீரவில்லை

கடல் கலக்கி களம் புகுவோம்
அந்த சிங்கள காடையர் சிரமறுப்போம்

நம் சிங்கத் தமிழர்க்கு
வாழ்வாளிப்போம்.

Saturday, March 22, 2008

மதம் என்பது..

மனித நேயத்தை
வற்புறுத்தாத
எந்த மதமும்
ஏற்ப்புடையதல்ல..

இந்து மதத்தை சேர்ந்த நபர் முகமதியராக மாறி..

செய்தி: பத்தாண்டுகளுக்கு முன்னாள் ஒரு முறை முகமதியர் நன்பர் ஒருவருடன் தோழுகைக்கு சென்றிறுந்தேன். அன்று இமாம் அவர்கள், உச்ச நீதிபதி ஒருவரின் தீர்ப்பை பற்றி பேசிக்கோண்டிருந்தார். அது, இந்து மதத்தை
சேர்ந்த நபர் முகமதியராக மாறி இரண்டாவது திருமணம் செய்ததைப் பற்றிய தீர்ப்பு. நீதிபதி அவர்கள், நம் நாட்டில் பொதுவான சட்டம் இல்லாததால் அந்த நபரை தண்டிப்பதில் இருக்கும் சிரமத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார். இமாம் அவர்களோ, "ஷரியத் இறைவனாள் வழங்கப்பட்டது அதில் மாற்றம் செய்யமுயன்றால் அதை உயிரை கொடுத்தும் தடுப்போம்" என்று பேசிக்கோண்டிருந்தார்,..
அப்போது, எனக்கு பின்னால் இருந்து ஒரு குரல், "ஷரியத்தை மட்டும் சொல்லி கொடுங்கள், நீதிபதி ஒருவரின் தீர்ப்பை பற்றி விமர்சிக்க வேண்டாம்" என்றது, அந்த குரலுக்குரியவர் வழக்கறினர்-நடிகர் மம்முட்டி அவர்கள்.

Monday, March 17, 2008

ஈழம்

திருநாள் வரும்
ஒரு நாள் வரும்.
தமிழர்க்கோர்
தனி நாடெனும்
திருநாள் வரும்
ஒரு நாள் வரும்.

இனி சூரியன்
சிவப்பாய் எழ
ஒரு காரணம்
கிடையாதென,
மயில் ஆடிடும்
குயில் பாடிடும்.
திருநாள் வரும்
ஒரு நாள் வரும்.

அமுதாய் ஒரு
ஒளிவீசிடும்
புது சூரியன்
அன்றெ எழும்
அலையோடெழும்.

புலியாய் இவர்
புறப்பட்டார்
எலியாய் சிலர்
எதிர்பட்டார்
ஒரு மிதியால்
அவர் புறமிட்டார்
என
உன் பிள்ளையும்
என் பிள்ளையும்
கைகோர்த்தொரு
பண்பாடிடும்
திருநாள் வரும்
ஒரு நாள் வரும்.

இனிதாய் ஒரு
கவிபாடியே
கவியோர் பலர்
கலந்தாடியே
பணிவாய்
அவர்
புகழ்பாடிடும்
திருநாள் வரும்
ஒரு நாள் வரும்.