சமீபத்தில் குமுதம்.காமில் விடுதலைச் சிருத்தைகள் அமைப்பின் தலைவர் திரு. திருமாவளவன் அவர்களின் செவ்வியை, "ஞாநி பேசுகிறேன்" என்ற நிகழ்ச்சியில் காணநேர்ந்தது. அதில், பிரபாகரன் என்ற திரைப்படத்தை இயக்கிய சிங்கள இயக்குநரின் கருத்துச் சுதந்திரத்தை தடுப்பது நியாயமா ? என்று ஞாநி அவர்கள் வாதாடினார். ஞாநியின் சூழ்ச்சியும், திருமாவின் நேர்மையும் வீரமும் அந்த உறையாடலில் நன்றாகத் தெரிந்தது. பொய்யான புராணங்கள் எழுதி ஒரு சமுதாயத்தையே ஏமாற்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயிறு வளர்த்தவர்களிடம் இதைத்தான் எதிர்ப்பார்க்க முடியும் என்பது உண்மை. நிகழ்ச்சியின் முடிவில், கவிஞர் அண்ணன் அறிவுமதி அவர்கள் தன் இனைய தளத்தில் சமிபத்தில் எழுதிய வரிகள் தான் நினைவுக்கு வந்தது. அவை,
"எங்கள் வீட்டுக்குள் எங்கள் பெண்களைக் கெடுக்க வருகிற மிருகங்களின் ஆண்குறிகளை வெட்ட வேண்டும் என்பது எங்களின் ஆத்திரம் ! இல்லை.. இல்லை…அந்தக் குறிகளுக்கு ஆணுறைகள் மாட்டிவிட வேண்டும் என்பது உங்களின் சாத்திரம். (http://arivumathi.wordpress.com/).
10 comments:
திருமாவிடம் ஞானி ஒரே கேள்வியைதான் அந்த நேர்காணலில் கேட்டார், அது ஈழத்து விடயங்களில் நீங்கள் காட்டும் தீவிரம் உங்களது அரசியலிலோ அல்லது உங்களிம் மக்கள் விதயங்களிலோ இல்லையே? இதைத்தான் விதப்பாக மாற்றி மாற்றி கேட்டார். அவர் கொஞ்ச நஞ்சம் சம்பாதித்து வைத்திருக்கும் செல்வாக்கையும் இழக்கவேண்டும் என்று ஞானி நினைகிறார் போலும்.
அமெரிக்காவில் கிடைக்காத தொழில் நுட்ப்பம் இல்லை தான் அதற்காக இரட்டை கோபுரத்தை தகர்த்ததை நீதிபடுத்தி ஒரு படத்தை எடுத்து அமெரிக்காவில் கொண்டு சென்று தொழி நுட்ப்பத்தை பயன்படுத்த தான் வந்தேன். நீங்கள் இதை எல்லாம் தடையோ அல்லது எதிர்போ காட்டாமல் எனக்கு நுட்ப்பத்தை வழங்கவேண்டும் என்று கேட்டு பாருங்கள் ஞானி அவர்கள் கைகள் என்ன செய்கிறது என்று. நாடு திரும்பமாட்டீர்கள் ..........
பனிமலர்.
சரியாகச் சொன்னீர்கள் பனிமலர். தமிழன் தலையை மொட்டையும் அடிக்கலாம், அதில் மிளகாயும் அரைக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
ஞாநி என்ன கேட்டார் என்று எனக்குத்
தெரியாது.அதற்கும் புராணங்களுக்கும்
என்ன தொடர்பு.ஞாநி புராணங்களை வைத்து பிழைப்பு நடத்துகிறாரா இல்லை அவற்றை ஆதரிக்கிறாரா.
அவர் கருத்து சுதந்திரம் குறித்துதான்
குமுதத்தில் எழுதியிருந்தார். அதை
அப்படி அணுகுவதே சரியானது.
பிரபாகரன் படம் தமிழ்நாட்டில்
திரையிடப்பட்டால் தடை உத்தரவு வாங்குங்கள். ஆனால் இயக்குனரை
உதைப்போம் என்பது என்ன நியாயம்.
அண்ணே வாங்க, எங்க அமெரிகாவில் இப்படி ஒரு காரியம் சாதியுங்கள் பார்க்கலாம். இரட்டை கோபுரங்கள் சாய்தது சரியே. அதெப்படி அல்லாவுக்கு எதிராக கருத்துகளை நீ பரப்பலாம் என்று எல்லாம் ஆங்கிலத்தில் அழகாக படம் எடுத்து ஆலிஉட் கொண்டு போங்க, திரும்பி வரீங்களான்னு பார்ப்போம். இவ்வளவு ஏன் இராமன் பாத்திரம் உண்மையான்னு இந்தியில படம் எடுத்து உத்திரபிரதேசம் சென்று இதே பின் தயாரிப்பு வேலையை செய்யனும் உதவுங்கள் என்று போங்கள் உயிருடன் வாரியளான்னு பார்ப்போம்...
பனிமலர்.
/பிரபாகரன் படம் தமிழ்நாட்டில்
திரையிடப்பட்டால் தடை உத்தரவு வாங்குங்கள். ஆனால் இயக்குனரை
உதைப்போம் என்பது என்ன நியாயம்./
1. இப்படத்தில் கருத்துக்கள் நேர்மையாக சொல்லப்படவில்லை என்கிறார்கள். நேர்மைக்குப் பிறகுதான் கருத்துரிமை, மற்றதெல்லாம் இருக்கமுடியும்.
2. நேர்மையற்ற இன்றைய சமூகத்தில், வலுத்தவன் எளியவனை அடக்க கருத்துரிமை என்ற போர்வை பயன்படுத்தப்படுகிறது/படும். (சிலசமயங்களில் கோர்ட் நீதிகளும் தான்).
மற்றபடி, இன்றைய உலகை மறந்துவிட்டு, கால தேச வர்த்தமானங்களைக்கடந்த நிலையில் மானுடத்தின் கருத்துரிமை பற்றி பேசிக்கொண்டிருந்தால் அநேகமாக அனைவரும் ஞாநி பக்கம்தான்.
இராமன் குடிகாரன்,ஸ்தீரி லோலன் அப்படின்னு மஞ்சள் துண்டு ஐயாவ உபி'ல போய் சொல்லச் சொல்லிப் பாருங்களேன் பனிமலர் அய்யா?
அப்ப இங்க இயக்குனர அடிக்கிறத ஒத்துக்கலாம்..
அமெரிக்காவில் இப்படி சில்லறைத்தனமாக நிராயுதபாணியாக தனித்து நிற்பவரை ஒரு கூட்டமாகச் சென்று 'கருத்தை தெரிவித்ததற்காக' அடித்ததில்லை. Fahrenheit 9/11 படம் பார்த்தீர்களா? முழுக்க முழுக்க 9/11 அமெர்க்க சதி என அமெரிக்கராலேயே எடுக்கப்பட்ட படம். அதற்காக மைக்கில் மூரை யாரும் அடிக்கவில்லை. அமெரிக்க டி.வியில் தினசரி ஜார்ஜ் புஷ் முட்டாள் எனக் கூறுகிறார்கள். டிக் சேனியை Hey Dick எனக் கீழ்த்தரமாக ஒரு செய்தியாளர் குறிப்பிடுகிறார். அவருக்கு அடி விழுந்ததா? இயேசுவைப் பற்றிய காமெடி இல்லாத வாரமே இல்லை. ஏதேனும் ஒரு டி.வியில் வந்துகொண்டே இருக்கிறது.
உங்க வீட்டுப் பெண்ணைப் புணரவருபவரின் குறியை மட்டுமல்ல அவரையே வெட்டிப்போடுங்கள்.. ஆனால் உங்கள் வீட்டுப்பெண்ணை சைட் அடித்தவனின் கண்ணை பத்துபேராய் சென்று புடுங்குவீர்களா?
எதிர் கருத்து சொல்பவர்களையெல்லாம் அடித்துப்பொடும் கலாச்சாரம் வேறெங்கெல்லாம் இருக்கிறது என்று தேடிப்பாருங்கள்... ஹிட்லரும், சதாமும், ஸ்டாலினுமாய் ஹீரோக்கள் தோன்றுவார்கள்.. ஏன் மோடியையும் சேத்துக்கலாம்.
கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள். திருமா செவ்வியில் வன்முறையை அங்கீகரிக்கவில்லை.
அன்று கூட்டத்தில் சென்று இயக்குநரைத் தாக்கியவர்களை இலங்கை சென்று சண்டைபோடச் சொல்லுங்கள். அது பாசம். மனித வெடிகுண்டாகச் செய்யுங்க.
தீபா மேத்தா என்ற ஒரு இயக்குனர் கங்கை கரையிக்கு சென்று THE WATER என்ற ஒரு திரைபடம் எடுக்கச்சென்றார். அப்போது அங்கே என்ன நடந்தது என்றும். இந்திய மண்ணிலே எங்களின் கொள்கைக்கு எதிராக படம் எடுக்கவிடமாட்டோம் என்று அவரை இலங்கைக்கு அனுப்பிய கதை எல்லாம் தெரியாது போலும் இந்த சாதுவிற்க்கு. பாவம் மஞ்சள் துண்டை வம்புக்கு இழுக்கிறார்.
பனிமலர்.
அமெரிக்கர்களின் செயலை அமெரிக்கர்களே விமர்சிப்பது வேறு, அவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று மற்றவர்கள் அவர்களை விமர்சிப்பது வேறு. வாசிபாய் தலைமை அமைச்சராக இருந்த போது, இங்கே இந்தியாவிற்கு வந்து அவரை பற்றி தாறுமாறாக எழுதிய அமெரிக்க விமர்சகரை எல்லா இந்திய பத்திரிக்கைகளும் எப்படி விமர்சித்தது என்று நன்றாக நினைவில் இருக்கும் என்று நம்புகிறேன். அன்றைக்கு தேசதின்மீதும் நமது தலைவர்களின் மீதும் நமக்கு இருந்த பற்று ஏழைகளி, கஞ்சிக்கு இல்லாதவர்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் செய்யலாம் என்று பொருள் இல்லை. அந்த ஆள் மட்டும் அமெரிக்க விமர்சகராக இல்லாமல், தீபா மேத்தாவை போல் ஒரு இந்திய பெண்ணாகவோ அல்லது தமிழ் பேசும் நபராகவோ இருந்திருந்தால் என்ன நடந்து இருக்கும்....
பனிமலர்.
சிபி அப்பா said...
நன்பர்களே,
"உங்கள் கருத்துக்களில் இருந்து நான் மாறுபடுகிறேன், அனால் கருத்து சொல்லும் உங்கள் உரிமையை உயிருள்ள வரை காத்துக் கொடுப்பேன்"-என்ற அறிஞர்கள் வாக்கை நானும் படித்திருக்கிறேன். கருத்துரிமை என்பது உண்மை ஊமை ஆகிவிடக்கூடாது என்பதர்க்காகத்தான்.
உங்கள் பிறப்பை ஒருவன் பழிக்கிறான் என்றால் மரபனு பரிசோதனை செய்து நிருபிக்கவேண்டியது தானே என்பது போல் உள்ளது உங்கள் வாதம்.
தமிழன் அவர்கள் சொன்னது போல் நேர்மைக்குப் பிறகுதான் கருத்துரிமை.
Post a Comment