Monday, March 17, 2008

ஈழம்

திருநாள் வரும்
ஒரு நாள் வரும்.
தமிழர்க்கோர்
தனி நாடெனும்
திருநாள் வரும்
ஒரு நாள் வரும்.

இனி சூரியன்
சிவப்பாய் எழ
ஒரு காரணம்
கிடையாதென,
மயில் ஆடிடும்
குயில் பாடிடும்.
திருநாள் வரும்
ஒரு நாள் வரும்.

அமுதாய் ஒரு
ஒளிவீசிடும்
புது சூரியன்
அன்றெ எழும்
அலையோடெழும்.

புலியாய் இவர்
புறப்பட்டார்
எலியாய் சிலர்
எதிர்பட்டார்
ஒரு மிதியால்
அவர் புறமிட்டார்
என
உன் பிள்ளையும்
என் பிள்ளையும்
கைகோர்த்தொரு
பண்பாடிடும்
திருநாள் வரும்
ஒரு நாள் வரும்.

இனிதாய் ஒரு
கவிபாடியே
கவியோர் பலர்
கலந்தாடியே
பணிவாய்
அவர்
புகழ்பாடிடும்
திருநாள் வரும்
ஒரு நாள் வரும்.

3 comments:

Anonymous said...

கனவு மெய்ப்படட்டும்!

சிபி அப்பா said...

நன்றி. மெய்ப்படும், ஆனால் இது கனவல்ல..

சிவசுப்பிரமணியன் said...

புதியதொரு காலையில்
புத்துயிர் பெற்ற பூமி
நம் சொந்தமாகும்.
குண்டு சத்தங்கள்
குயிலோசையாக மாறும்.
துப்பாக்கிச் சத்தங்களும்
தூர விலகி வழிவிடும்.
இன்றைய கண்ணீர் கதைகள்
நாளைய வீர காவியங்கள்.
இன்று சிந்தும் கண்ணீரும் குருதியும்
நாளைய மண்ணிற்கான உரங்கள்.
இன்றைய கேள்விகளுக்கு
காலம் பதில் சொல்லும்
துன்பங்கள் விலகிச் செல்லும்
தமிழீழம் என்றும் வெல்லும்.